கொண்டைக் கடலை உணவில் அதிகம் சேர்த்து கொண்டால் இதயம் ஆரோக்கியமாக இருக்கும். கொண்டைக் கடலை கருப்பை பையில் குழாயில் பிரச்சினை ஏற்படுவதையும், இரத்த சோகை பிரச்சனையையும் தடுக்கும். இதை அடிக்கடி செய்து சாப்பிட்டு வந்தால் உடலின் ஆற்றலை அதிகரிக்கப்பதுடன் கொழுப்பும் குறையும்.
இந்த கருப்பு கொண்டைக் கடலை குழம்பு உடல் சோர்வை போக்கும் தன்மை கொண்டது. கொண்டைக்கடலைச் செடியின் மீது ஒரு வெள்ளைத் துணியை இட்டு, அதன் மீது படியும் பனி நீரைப் பிழிந்து சேகரிப்பது ‘கடலைப் புளிப்பு’ என்று அழைக்கப்படுகிறது. செரியாமை, வாந்தி போன்ற நோய்களுக்கு இந்தப் புளிப்பு நீர் மருந்தாகப் பயன்படுகிறது.
கருப்பு கொண்டைக் கடலை குழம்பு – Black Chick pea curry

கருப்பு கொண்டைக் கடலையை 4 மணி நேரம் ஊறவைத்து பின் உப்பு சேர்த்து குக்கரில் வேகவிடவும். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் தாளித்து, வெங்காயம், தக்காளி வதக்கியதும், பிறகு உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின் வதங்கியதும் வேகவைத்த கொண்டைக்கடலை சேர்த்து அரை டம்ளர் நீர் விட்டு கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும் புளிக்கரைசலை சேர்க்கவும். 5 நிமிடம் கழித்து கொதித்ததும் தேங்காய் துருவல், முந்திரி அரைத்து விழுது சேர்த்து மீண்டும் கொதிவிட்டு குழம்பு சற்று கெட்டியானதும் கொத்தமல்லி போட்டு இறக்கவும்.
Ingredients
Instructions