Tuesday, August 16, 2022
HomeEvents-நிகழ்வுகள்கொக்குவிலில் நாளை கறுப்பு யூலை நினைவேந்தல்

கொக்குவிலில் நாளை கறுப்பு யூலை நினைவேந்தல்

சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பும், மக்கள் போராட்ட இயக்கமும் இணைந்து முன்னெடுக்கும் 39 ஆவது ஆண்டு கறுப்பு யூலை நினைவேந்தல் நிகழ்வு நாளை ஞாயிற்றுக்கிழமை(31.7.2022) மாலை-3.30 மணிக்கு கே.கே.எஸ்.வீதி, யாழ்.கொக்குவில் சந்தியில் அமைந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவை மண்டபத்தில் நடைபெறும்.

யாழ்.மாவட்டத்தில் முதன்முறையாக தமிழ்,சிங்கள சமூக, அரசியல் செயற்பாட்டாளர்கள் கலந்துகொண்டு இந்த நிகழ்வில் நினைவு உரைகள் நிகழ்த்த உள்ளனர்.

இதேவேளை, குறித்த நிகழ்வில் அனைவரையும் இணைந்து கொள்ளுமாறு நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் அழைப்பு விடுத்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular