fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

ப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் நக்சலைட்டுகளுடன் தொடர்பு- பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா!!

இந்தியாவில் பல ஆண்டுகளாக அமலில் இருந்த காஷ்மீர் மாநிலத்தின் சிறப்பு உரிமையானது கடந்த ஆண்டு ரத்து செய்யப்பட்டது, சிறப்பு உரிமை ரத்து பெரிய அளவில் பிரச்சினை ஆன நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் காஷ்மீர் மக்களின் சிறப்பு அந்தஸ்து திரும்பக் கிடைக்கச் செய்வதில் காங்கிரஸ் உறுதியாக உள்ளது என்று கூறியுள்ளர்.

அதாவது பா.சிதம்பரம் கூறுகையில், “காஷ்மீர் மக்களின் உரிமைகளை திரும்ப கிடைக்கச்செய்ய, பாஜக தலைமையில் எடுத்த முடிவினை திரும்பப்பெறச் செய்வதில் காங்கிரஸ் கட்சி எப்போதும் பின்வாங்காமல் உறுதியாக இருக்கும்” என்று கூறினார்.

ப.சிதம்பரத்துக்கு பாகிஸ்தான் நக்சலைட்டுகளுடன் தொடர்பு- பாஜக தலைவர் ரவீந்தர் ரெய்னா!!

பா.சிதம்பரத்தின் கருத்தை காஷ்மீர் யூனியன் பிரதேச பா.ஜ.க. தலைவர் ரவீந்தர் ரெய்னா விமர்சித்துள்ளார். அதாவது, “காங்கிரஸ் கட்சியினைப் பொறுத்தவரை நாட்டின் நலனைக் கருத்தில் கொள்ளாமல் நாட்டுக்கு எதிராகப் பேசுவதிலும், அதற்கான கருத்துகளை வலியுறுத்தி மக்கள் மனதில் திணிப்பதையுமே முழு மூச்சாகக் கொண்டு செயல்படுகின்றனர்.

இதனால் எங்களுக்கு காங்கிரஸ் தலைவர் பா.சிதம்பரத்திற்கு ஐ.எஸ்.ஐ.யுடனும், நக்சலைட்டுகளுடனும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகம் வந்துள்ளது.” என்று கூறியுள்ளார்.

Related posts

தமிழ்நாட்டில் பரவலாக கனமழை

World News

அடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

World News

நீட் தேர்வு பயிற்சி வகுப்புகளைத் தொடங்க அரசுக்கு வேண்டுகோள்

N N