fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

நீரழிவு நோயாளிகளுக்கான பாகற்காய் ஊறுகாய்!!

பாகற்காய் கசக்கும் என்பதால் பாகற்காய் குழம்பு, கிரேவி என பாகற்காய் சார்ந்த உணவுகளை பலரும் தவிர்ப்பர், இது குடலில் உள்ள புழுக்களை அழிக்கும் தன்மை கொண்டது. மேலும் நீரழிவு நோயாளிகளுக்கு ஏற்றது. இப்போது நாம் பாகற்காய் ஊறுகாய் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.

நீரழிவு நோயாளிகளுக்கான பாகற்காய் ஊறுகாய்!!

 

நீரழிவு நோயாளிகளுக்கான பாகற்காய் ஊறுகாய்!!-

நீரழிவு நோயாளிகளுக்கான பாகற்காய் ஊறுகாய்!! நீரழிவு நோயாளிகளுக்கான பாகற்காய் ஊறுகாய்!! Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 10 fat
Rating: 5.0/5
( 1 voted )

Ingredients

  • பாகற்காய் - 200 கிராம்
  • நல்லெண்ணெய் - 100 கிராம்
  • மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
  • வெந்தைய தூள் - 2 டீஸ்பூன்
  • பெருங்காய் தூள் -1 டீஸ்பூன்
  • கடுகு - 1 டீஸ்பூன்
  • உப்பு – தேவையான அளவு.
  • வினிகர் - 150 மில்லி

Instructions

  1. பாகற்காயை நறுக்கி உள்ளிருக்கும் விதைகளை நீக்கி, பொடிபொடியாக நறுக்கி கொள்ளவும் .
  2. அடுத்து அதை ஒரு பாத்திரத்தில் விட்டு அதோடு உப்பு சேர்த்து பிசையவும்.
  3. அடுத்து அதனை அப்படியே மூடி வைத்து விட வேண்டும்
  4. ஒருநாள் கழித்து, வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு போட்டு தாளிக்கவும்
  5. அடுத்து பெருங்காய தூள், வெந்தய தூள் போட வேண்டும்.
  6. அடுத்து ஊற வைத்துள்ள பாகற்காயை போட்டு சில நிமிடம் நன்றாக வதக்க வேண்டும். அதன்பின்னர் மிளகாய்த் தூள் போடவும்.
  7. பாகற்காய் வதங்கியதும், அதில் வினிகரை ஊற்றவும்.
  8. அடுப்பை சிம்மில் வைத்து வினிகர் வற்றும் வரை கிளறவும்.
  9. சூப்பரான பாகற்காய் ஊறுகாய் ரெடி.

Related posts

குழந்தைகளுக்கு ஏற்ற சுவையான ஸ்நாக்ஸ் சுசியம்

N N

சுவையான ரசகுல்லா செய்யலாம் வாங்க!!

N N

சத்தான அரிசி மாவு மோர் களி

N N