fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்திய உணவுகள்

பாகற்காய் தொக்கு

பாகற்காய்  கசப்பு தன்மை உடையது. பாகற்காய்  பெரும்பாலும் உடலுக்கு நல்லது என்று எல்லோருக்கும் தெரியும்.  அதிகாலையில் வெறும் வயிற்றில், மூன்று முதல் நான்கு பழத்தைச் சாறு பிழிந்து குடித்து வரலாம். இதன் விதைகளைப் பொடி செய்து சாப்பாட்டோடு கலந்தும் சாப்பிட்டும் வரலாம். சர்க்கரை நோயாளிகள் அடிக்கடி உணவில் பாகற்காயை சேர்த்து கொள்வது நல்லது. பாகற்காயை வைத்து சூப்பரான தொக்கு செய்வது எப்படி என்று இப்போது பார்க்கலாம்.

பாகற்காய் தொக்கு
bitter gourd – பாகற்காய் தொக்கு


bitter gourd - பாகற்காய் தொக்கு

பாகற்காய் தொக்கு பாகற்காய் தொக்கு Print This
Serves: 4 Prep Time: Cooking Time:
Nutrition facts: 200 calories 25 grams fat
Rating: 5.0/5
( 2 voted )

Ingredients

  • பாகற்காய் - 1
  • தனியா - 1 டீஸ்பூன்
  • சீரகம் - 1/2 டீஸ்பூன்
  • மிளகாய் வத்தல் - 6
  • புளி - 1 எலுமிச்சை அளவு
  • வெல்லம் - 1 எலுமிச்சை அளவு
  • உப்பு - தேவையான அளவு
  • எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
  • கடுகு - 1/4 டீஸ்பூன்
  • உளுந்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
  • கடலைப் பருப்பு - 1/4 டீஸ்பூன்
  • கறிவேப்பிலை - சிறிது
  • பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
  • தேங்காய் துருவல் - சிறிதளவு

Instructions

பாகற்காயை நன்றாக கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.  பின் பாகற்காயை துண்டுகளாக நறுக்கி வைத்து  அதில் 1 டீஸ்பூன் உப்பு  மற்றும் 1 டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து, 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும். ஊற வைத்த பின் பாகற்காயில் இருக்கும்  நீரானது வெளியேறி விடும். அந்த நீரை ஊற்றிவிட்டு, அதில் சிறிது தண்ணீர் தெளித்து மீண்டும் நன்றாக சேர்த்து விட வேண்டும். இதனால் பாகற்காயில் உள்ள கசப்பானது குறைந்து விடும். கடாயில் தனியா, மிளகாய் வத்தல் , சீரகத்தை போட்டு நன்றாக வறுத்து வைத்து கொள்ளவும். புளியை நன்றாகக் கரைத்து வைத்து கொள்ளவும். மிக்ஸியில் வறுத்தப் பொருட்ளை எல்லாம் சேர்த்து அதோடு புளி மற்றும் வெல்லம் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு கடாயில்  எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்தம் பருப்பு , கடலைப் பருப்பு ,  பெருங்காயத்தூள், கருவேப்பில்லை சேர்த்து அதோடு  பாகற்காயை போ சேர்த்து வதக்கவும்.  பாகற்காய் பாதியளவு வெந்தவுடன் அதில் அரைத்த விழுதைப் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து கிளறி, மிதமான தீயில் 20 நிமிடம் வேக வைக்க வேண்டும். பின் தேங்காய் துருவல் சேர்த்து கிளறி வெந்தவுடன் கிளறி இறக்கினால் பாகற்காய்  தொக்கு தயார்.

 

Related posts

சுவையான பூர்ண கொழுக்கட்டை!!

N N

முருங்கைக்கீரை புற்றுநோய்க்கு எதிரியா

N N

வித்தியாசமான சிக்கன் பொடிமாஸ்!!

N N