Saturday, May 28, 2022
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்ஆம்பூர் பிரியாணி திருவிழா.. அதுவும் வெறும் 100 ரூபாயிலா.. மொத்தம் இத்தனை ஸ்டால்களா!

ஆம்பூர் பிரியாணி திருவிழா.. அதுவும் வெறும் 100 ரூபாயிலா.. மொத்தம் இத்தனை ஸ்டால்களா!

அசைவ உணவு விருந்து என்றால் நிச்சயம் அந்த விருந்தில் பிரியாணிக்குதான் முதல் இடம் இருக்கும்.

உலக அளவில் அதிக அளவிலான நபர்கள் விரும்பும் ஒரு உணவாக பிரியாணியே உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன.

பிரியாணியில் ஹைதராபாத் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, கீமா பிரியாணி, கேலிகெட் பிரியாணி, பாம்பே பிரியாணி, தலசேரி பிரியாணி, திண்டுக்கல் பிரியாணி எனப் பல பிரியாணி வகைகள் உள்ளன.

அந்த வகையில் தமிழகத்தினைப் பொறுத்தவரை மிகவும் பிரபலமாக இருப்பது ஆம்பூர் பிரியாணி.

ஆம்பூர் பிரியாணியினைக் கொண்டாடும் வகையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ஆம்பூர் பிரியாணி திருவிழா மே 13 ஆம் தேதி துவங்கி மே 15 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

மேலும் இந்த பிரியாணி திருவிழாவானது மாலை 5 மணி முதல் 8 மணி வரை ஆம்பூர் கன்னிகாபுரத்தில் உள்ள வர்த்தக மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.

மொத்தமாக 50 ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ள நிலையில் ரூ.100 முதல் துவங்கி பிரியாணி விற்பனை செய்ய உள்ளனர்.

இந்த செய்தியினைக் கேட்ட பிரியாணி பிரியர்களோ இப்பவே ரெடி ஆய்ட்டோம்னு ஆம்பூர் செல்ல டிக்கெட்டுகளை பதிவு செய்யத் துவங்கிவிட்டனர் என்றால் பாருங்களேன்.

RELATED ARTICLES

Most Popular