fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்ற பிக்பாஸ் தர்ஷன்!!
சினிமா

கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்ற பிக்பாஸ் தர்ஷன்!!

கடந்த ஆண்டு நடைபெற்ற பிக் பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவர் இலங்கையைச் சார்ந்த விளம்பர மாடல் தர்ஷன். இவரது நேர்மையான விளையாட்டு பலரையும் கவர்ந்து இருந்தது.

பெரிய அளவில் கோபம் எதையும் காட்டாமல் சிரித்தவாறே பிக் பாஸ் நிகழ்ச்சி முழுவதிலும் பயணித்த தர்ஷன் பிக் பாஸ் கோப்பையினையும் 50 லட்சம் ரூபாய் ரொக்கப் பணத்தையும் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் அவர் திடீரென வெளியேறி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்தார், இதனால் பிக் பாஸ் 3 நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியில் கமல் ஹாசன் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தில் தர்ஷனுக்கு வாய்ப்பினைக் கொடுத்தார்.

கே.எஸ்.ரவிக்குமார் படத்தில் நடிக்கும் வாய்ப்பினைப் பெற்ற பிக்பாஸ் தர்ஷன்!!

அதன்பின்னர் தர்ஷன் சினிமாவில் கவனம் செலுத்தி வந்தார். அதாவது மலையாளத்தில் வெளியான ‘ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’ படத்தின் தமிழ் ரீமேக்கில் தர்ஷன் நடிக்க உள்ளதாகவும், இந்தப் படத்தை கே.எஸ்.ரவிக்குமார் தயாரிப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் படத்தை கே.எஸ். ரவிக்குமாரின் துணை இயக்குனர்களான சரவணன், சபரி ஆகியோர் இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Related posts

ஒட்டு மொத்த ரசிகர்களையும் அதிர்ச்சியாக்கிய புகைப்படம்..! அசத்திய பிரசாந்த் !

TamilTwin India

ரஞ்சித்துடன் கூட்டணியா?சிம்புவின் அடுத்த படம் பற்றி வெளியான தகவல்.!

TamilTwin India

சினிமாவில் கதாநாயகியாக ஒப்பந்தம் ஆகியுள்ள நடிகை வனிதா விஜயகுமார்!!

TT Media