fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

புதிய தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்த பாவனா

தமிழ், மலையாளத் திரைப்படங்களில் கலக்கிய நடிகை பாவனா. தமிழ் திரையுலகில் சித்திரம் பேசுதடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். இப்பொழுது கன்னட மொழிகளில் நடித்து வருகிறார். தற்சமயம் புதிய தோற்றத்தில் ரசிகர்களை கவரும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

            கதாநாயகிகள் பெரும்பாலும் தங்கள் உடல்தோற்றம் குண்டானால் அந்த படத்தை வெளியிட மாட்டார்கள். அவர்களிடம் இருந்து பாவனா மாறுபட்டு இருக்கிறார். பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய பாவனா கடந்த ஆண்டு தனது நண்பரும், கன்னட பட தயாரிப்பாளருமான நவீனை காதல் திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து மலையாள படங்களில் நடிப்பதையும் கைவிட்டு கன்னட படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். இந்த ஆண்டில் 2 கன்னட படங்களில் நடித்து வருகிறார்.

புதிய தோற்றத்தில் ரசிகர்களை கவர்ந்த பாவனா

தமிழில் விஜய்சேதுபதி, திரிஷா நடித்து ஹிட்டான 96 படத்தின் கன்னட ரீமேக்காக உருவாகும் படத்தில் திரிஷா கதாபாத்திரத்தில் நடிக்கிறார். திருமணமான சந்தோ‌ஷத்தில் பாவனா தனது ஒல்லியான தோற்றத்திலிருந்து மாறி இருக்கிறார். இந்நிலையில் தனது புதிய படங்களை வலைதளங்களில் தற்போது வெளியிட்டுள்ளார். சிவப்பு நிற லெஹங்கா டிரஸ் மற்றும் சிவப்பு நிற சேலை, அதே நிறத்தில் ஜாக்கெட்டும் அணிந்து குண்டான தோற்றத்தில் இருக்கிறார். பாவனாவின் இந்த தோற்றமும் ரசிகர்களை கவர்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

சிம்பு மாதிரி ஒரு ஆள பார்க்கவே முடியாது, விஷ்ணு விஷால் அதிரடி பதிவு.!

TamilTwin India

நடிகர் யாஷ் யாகம் செய்த காரணம்!

TamilTwin India

ஷுட்டிங் முடிந்து சென்னை திரும்பிய ரஜினிகாந்த்

N N