fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் பாரதிராஜா

சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் புதிய படத்தில் பாரதிராஜா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சிவகார்த்திகேயன் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மெரினா ஆகிய இரு படங்களை அடுத்து மூன்றாவது முறையாக பாண்டிராஜுடன் இணைகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது .

     எம்.ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்து முடித்துள்ளார். நயன்தாரா இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். இந்தப் படத்தை அடுத்து ரவிக் குமார் இயக்கத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் இரும்புத்திரை பட இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஹீரோ படத்திலும் நடித்து வருகிறார். அர்ஜுன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்தப் படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், இவானா ஆகியோரும் நடிக்கின்றனர்.

சிவகார்த்திகேயனுடன் நடிக்கும் பாரதிராஜா

      இந்த படங்களுக்குப் பிறகு பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்க சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இந்தப் படத்தின் மூலம் கேடி பில்லா கில்லாடி ரங்கா, மெரினா ஆகிய இரு படங்களை அடுத்து மூன்றாவது முறையாக பாண்டிராஜுடன் இணைகிறார் சிவகார்த்திகேயன். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இயக்குநர் பாரதிராஜா நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

மலையாள காமெடி நடிகர் கலாபவன் ஜெயேஷ் புற்றுநோயால் மரணம்

TamilTwin India

அச்சு அசலாக எஸ்.பி.பியின் குரலில் பாடும் நபர், வைரலாகும் வீடியோ !

TamilTwin India

அமெரிக்க ரியாலிட்டி ஷோவில் ரஜினி பாடல் ! ட்ரெண்டாகும் வீடியோ

TamilTwin India