fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பரத்தின் பொட்டு திரைப் படம் 1000 திரை அரங்குகளில் வெளியாகிறது

பரத் – நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பொட்டு.  இத்திரைப்படம் ஒரே நேரத்தில் 1000 திரை அரங்குகளில் ரிலீஸ் ஆகப் போகிறது எனப் படக்குழு தெரிவித்து உள்ளது.  ஷாலோம் ஸ்டுடியோஸ் பட நிறுவனம் சார்பில் ஜான்மேக்ஸ், ஜோன்ஸ் ஆகியோர் பொட்டு படத்தினை தயாரித்து உள்ளனர்.  இந்தப் படத்தில் பரத் நாயகனாகவும், நமீதா, இனியா, சிருஷ்டி டாங்கே நாயகிகளாகவும் நடித்து இருக்கின்றனர்.  தம்பி ராமையா, பரணி, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, நிகேஷ் ராம், ஷாயாஜி ஷிண்டே, மன்சூர் அலிகான், ஆர்யன், சாமிநாதன், பாவா லட்சுமணன், பயில்வான் ரங்கநாதன் ஆகியோரும் இத்திரைப்படத்தில் நடித்து உள்ளனர்.

      பொட்டு திரைப்படத்தினைப் பற்றி இயக்குநர் வடிவுடையான் பற்றி பேசும் பொழுது, பரத் இதுவரை நடித்த படங்களிலேயே ஒரே நேரத்தில் 1000 திரை அரங்குகளில் வெளியாக உள்ள படம் இது தான்.  ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் படம் வெளியாக உள்ளது.  கேரளா, கர்நாடகா போன்ற இடங்களில் நேரடியாக தமிழ் ரிலீஸ் செய்கிறோம் எனத் தெரிவித்து உள்ளார்.

Related posts

அட்டை படத்திற்காக கவர்ச்சி போஸ் கொடுத்த பிரபல நடிகை !

TamilTwin India

ஆள் அடையாளம் தெரியாமல் மாறிப்போன கரண், வைரலாகும் வீடியோ!

TamilTwin India

நடிகைக்கு முத்தம் கொடுத்து விட்டு ஓடிய ரசிகர் அதிர்ச்சி வீடியோ

TamilTwin India