புனிதமான கார்த்திகை மாதத்தில் மட்டக்களப்பில் மரநடுகைத் திட்டம் ஆரம்பம் (Photos)

சுவிஸ் சூரிச் சிவன் கோயில் சைவத்தமிழ்ச் சங்கத்தின் அன்பேசிவம் அமைப்பின் ஏற்பாட்டில் தமிழர்களின் புனித மாதமான கார்த்திகை மாதத்தில் ஒவ்வொரு வருடமும் வடக்கு- கிழக்கு மாவட்டங்களில் ‘வரப்புயர’ மரநடுகைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் நிகழ்கால, எதிர்கால சந்ததியின் நலனைக் கருத்தில் கொண்டு பல ஆயிரம் மரங்களை நாட்டும் ‘வரப்புயர’ மரம் நடுகைத் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை (13.11.2021) ஆரம்பித்து வைக்கப்பட்டது.

மட்டக்களப்பு வாகரைப் பிரதேசத்தின் கட்டுமுறிவுக்குளம் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற மரம் நாட்டு நிகழ்வில் அன்பேசிவம் தொண்டர்கள் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். குறித்த திட்டம் எதிர்வரும் நாட்களில் தொடர்ச்சியாக அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறும் என அன்பேசிவம் அமைப்பினர் அறிவித்துள்ளனர்.

(பானு)