fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Events-நிகழ்வுகள் இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

கடமைகளைப் பொறுப்பேற்றார் மட்டக்களப்பின் புதிய அரசாங்க அதிபர் (Photos)

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக கணபதிப்பிள்ளை கருணாகரன் இன்று சனிக்கிழமை(17) மாவட்டச் செயலகத்தில் தனது கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இலங்கை நிர்வாக சேவை விசேட தர உத்தியோகத்தரான இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி, வெல்லாவெளி, ஆரையம்பதி, வாழைச்சேனை மற்றும் வவுணதீவு ஆகிய பிரதேச செயலகங்களின் பிரதேச செயலாளராக கடமையாற்றியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளராகவும், வீதி அபிவிருத்தி, காணி மற்றும் சமுக அபிவிருத்தி அமைச்சின் செயலாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

கடந்த- 14 ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக அமைச்சரவையினால் நியமனக் கடிதத்தினைப் பெற்றுக்கொண்டதையடுத்து சமய வழிபாட்டின் பின்னர் அவர் தனது கடமையினை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

மேற்படி நிகழ்வில் புதிய அரசாங்க அதிபருடன் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், காணிப்பிரிவிற்கான மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. நவரூபரஞ்ஜினி முகுந்தன், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், பிரதம கணக்காளர் க. ஜெகதீஸ்வரன் மற்றும் மாவட்டச் செயலக திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், பிரதேச செயலாளர்கள், மாவட்டச் செயலக உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

ரணிலுக்கும் அழைப்பு விடுத்தது தெரிவுக்குழு!

TamilTwin

யாழ். பல்கலை மாணவர்களால் முன்னெடுக்கப்படும் மாபெரும் எழுச்சிப் பேரணி: வடக்கின் ஐந்து மாவட்டங்களிலிருந்தும் போக்குவரத்து ஏற்பாடுகள்

TamilTwin

கொரோனா: வடமாகாண மருத்துவர்கள் மன்றம் அறிக்கை

World News