fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

மட்டக்களப்பின் புதிய அரசாங்க அதிபர் வழங்கியுள்ள உறுதிமொழி! (Photo)

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள அனைத்து இன மக்களுக்கும் இனமத பேதமின்றி சேவை வழங்குவதுடன் கடந்த காலங்களை விடக் குறைவில்லாமல் எமது பணி சிறப்பாக அமையும் என மட்டக்களப்பின் புதிய அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை கருணாகரன் உறுதி மொழி வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய அரசாங்க அதிபராக இன்று சனிக்கிழமை (17) மாவட்டச் செயலகத்தில் கடமையினைப் பொறுப்பேற்றுக் கொண்ட பின் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

சவால்மிக்க பொறுப்புவாய்ந்த கடமையொன்றினை மேற்கொள்வதற்கான சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்துள்ளது. இதனைத் திறம்பட மேற்கொள்ள அனைவரினதும் ஒத்துழைப்புக்களையும் பெரிதும் எதிர்பார்க்கின்றேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

Related posts

ஐந்து மாதங்களாக மனைவியுடன் பேசாத கணவருக்கு நேர்ந்த கதி!!

TamilTwin

சாலிந்த திஸாநாயக்க எம்பி காலமானார் (Photo)

TamilTwin

தனி ஒரு நபருக்காக 20 ஆவது திருத்தம்: ரணில் கடும் சாடல்!

TamilTwin