fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

விபத்தில் இளைஞன் மரணம்: ஏப்ரல் பூல் எனக் கூறி அழைப்பை துண்டித்த குடும்பத்தினர் (Photos)

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட் சவுக்கடியில் இடம்பெற்ற விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஏறாவூர் சவுக்கடி கடற்கரை வீதியில் நேற்று (01) பிற்பகல்-04.30 மணியளவில் உழவு இயந்திரமொன்றில் அதிவேகமாக பயணித்தமையால் வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியில் அருகாமையில் பனை மரமொன்றில் மோதி இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் மட்டக்களப்பு வாகரை பனிச்சங்கேணியைச் சேர்ந்த எஸ். சுரேஸ்காந் (வயது- 22) என்பவரே இவ்வாறு பலியாகியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் வாகரையில் உள்ள உயிரிழந்த இளைஞனின் குடும்பத்தாருக்கு சம்பவ இடத்தில் இருந்தவர்கள் தொலைபேசி மூலம் பலியான விடயத்தைக் கூறியுள்ளனர். அதற்கு அவர்கள் இன்று ஏப்ரல் ஃபூல் (உலக முட்டாள்கள் தினம்) எங்களுக்குத் தெரியும் போனை வையுங்கள் என்று அழைப்பை துண்டித்துள்ளனர். பின்னர் ஒருவாறாக உறவினர்களுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

ராமேஸ்வரத்துக்கு சென்ற சீனப்பயணியால் திடீர் பரபரப்பு

World News

தேர்த் திருவிழா நாளில் ஏழாலையில் கண்கொள்ளாக் காட்சி (Video, Photos)

TamilTwin

வரும் இரண்டாம் திகதி முதல் மாற்றம்: கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவிப்பு!

World News