Tuesday, September 27, 2022
HomeEvents-நிகழ்வுகள்மண்டைதீவு மக்களுக்கு வாழைமரங்கள் கையளிப்பு(Photos)

மண்டைதீவு மக்களுக்கு வாழைமரங்கள் கையளிப்பு(Photos)

தமிழ் அரசுக் கட்சியின் ஊர்காவற்துறைத் தொகுதிச் செயலாளரும், வேலணைப் பிரதேச சபை உறுப்பினருமான கருணாகரன் நாவலன் தனது பிரதேச சபை உறுப்பினருக்கான வேதனத்தில் 20, 000 ரூபா பெறுமதியான வாழைமரங்களை இன்று புதன்கிழமை(10.8.2022) யாழ்.மண்டைதீவு மக்களுக்கு வழங்கினார்.

அத்துடன் வேலணையில் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட ஒரு குடும்பத்திற்கு 6000 ரூபா பெறுமதியான சத்துணவுப் பொருட்களையும் வழங்கினார்.

மேற்படி செயற்பாடுகளில் வேலணைப் பிரதேசசபை உறுப்பினர் திருமதி. அ. மேரிமற்றில்டா (தங்கராணி ) மற்றும் தமிழ் அரசுக் கட்சி உறுப்பினர்களான கருணாகரன் குணாளன், தவராஜா தர்சன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

(செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular