Tuesday, August 16, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்மத குருமார்களிற்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்குமாறு யாழிலிருந்து ஜனாதிபதிக்கு கடிதம்

மத குருமார்களிற்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்குமாறு யாழிலிருந்து ஜனாதிபதிக்கு கடிதம்

மத குருமார்களிற்கு QR முறைமை மூலம் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்குமாறு வலி.தெற்குப் பிரதேச சபையின் ஐக்கியதேசியக் கட்சி உறுப்பினரும், இளம் சமூக சேவகருமான பாலசிங்கம் சுரேஷ்குமார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மின்சக்தி எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜயசேகர மற்றும் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துக் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.

பதிவுத் தபால் மூலம் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வணக்கத்திற்குரிய இந்து குருமார்கள், அருட்தந்தையர்கள், மெளலவிகள், பெளத்த துறவிகள் போன்றவர்களை மதித்து மரியாதையுடன் நடாத்துவது எமது கடமையாகும்.

எனவே, தயவு செய்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இவர்களை வரிசையில் காத்து நிற்கவிடாது முன்னுரிமை அடிப்படையில் QR முறைமை மூலம் விரைவாக எரிபொருட்களை வழங்கி மதக் கடமைகளையும், சமய அனுட்டானங்களையும் மேற்கொள்வதற்கு உதவி புரியுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் எனவும் அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, மேற்படி கடிதத்தின் பிரதி வடமாகாணப் பெற்றோலியக் கூட்டுத்தாபனப் பொதுமுகாமையாளர் சிவதர்சனுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular