fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ரசிகர்களின் பாராட்டுக்காகக் காத்திருக்கும் பாலக் லால்வானி

தமிழ் சினிமாவின் புதிய வரவு பாலக் லால்வானி. இவர் தெலுங்கு பட நடிகையாவர். தமிழில் சகா படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் சில நாட்களுக்கு முன் ரசிகர்கள் பாராட்டும் நாளை எதிர்பார்த்து இருப்பதாக கூறியுள்ளார்.

    இயக்குனர் பாபா பாஸ்கர் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் தற்போது உருவாகியுள்ள படம் குப்பத்து ராஜா இப்படத்தில் ஜி.வி.பிரகாஷ்க்கு ஜோடியாக பாலக் லால்வானி நடித்திருக்கிறார். இந்நிலையில் இப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. நடிகை பாலக் லால்வானி இது குறித்து அவர் கூறுகையில்

ரசிகர்களின் பாராட்டுக்காக காத்திருக்கும் பாலக் லால்வானி

“இந்த வாய்ப்பை நான் ஒப்புக் கொண்டபோது, உற்சாகம் மட்டுமல்லாது பதட்டம் கலந்த ஒரு உணர்வை உணர்ந்தேன். மேலும் இந்தப் படம் லோக்கல் பின்னணியில் இருந்ததால், அந்த ஏரியாவுக்கு ஏற்ற தமிழை மிகச்சரியாக பேச வேண்டும் எனவும், கதாபாத்திரத்தை உண்மையாக மிகவும் நெருக்கமாக செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது என கூறியுள்ள இவர், என் வசனங்களில் மிகவும் பொறுமையாக மற்றும் உதவியாக இருந்த இயக்குனர் பாபா பாஸ்கர் சார், ஜி.வி.பிரகாஷ் மற்றும் பலருக்கும் நன்றி” இவ்வாறு இவர் கூறியுள்ளார். மேலும் என் நடிப்பை ரசிகர்கள் பாராட்டும் நாளிற்காக காத்திருக்கிறேன் என்று கூறியுள்ளார். இப்படம் மே 5 ம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

Related posts

தனி விமானத்தில் வீடு திரும்பிய நயன், விக்கி ஜோடி..!!

TamilTwin India

ஜீ5 தளத்தில் வெளியானது பிக்பாஸ் காயத்ரி ரகுராம் இயக்கிய முதல் திரைப்படம் !

TamilTwin India

மீண்டும் கைகோர்க்கும் கொம்பன் கூட்டணி

TamilTwin India