விஷால் மற்றும் ராஷி கண்ணா நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் அயோக்யா. இப்படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து தற்போது இப்படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தேதியினை ஏப்ரல் 19 ஆம் தேதியாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். இப்படம் தெலுங்கில் வெளியான டெம்பர் என்ற படத்தின் ரீமேக் ஆகும்.

அயோக்யா திரைப்படத்தினை லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் பி. மது தயாரித்து உள்ளார். ஏ. ஆர் முருகதாஸிடம் பணிபுரிந்த வெங்கட் மோகன் அவர்கள் இப்படத்தினை இயக்கி வருகிறார். இப்படத்தின் ஒரு பாடலுக்கு ஷரந்தா தாஸ் நடனம் ஆடி இருக்கிறார். முதலில் இப்பாடலுக்கு சன்னி லியோன் தான் ஆடுவதாக இருந்தது ஆனால் அவருக்கு பதில் ஷரந்தா தாஸ் நடனம் ஆடி இருக்கிறார். இப்படத்தில் ஆர்.பார்த்திபன், ராதாரவி, கே.எஸ்.ரவிகுமார், ஆடுகளம் நரேன், வம்சி, சோனியா அகர்வால், சச்சு முதலியோர் நடித்து இருக்கின்றனர். இப்படத்தின் வெளியீட்டு உரிமையினை ஸ்கிரின் சீன் நிறுவனம் பெற்று உள்ளது.