fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஈழத்தமிழ் பெண்ணுக்கு கிடைக்கவுள்ள விருது!
உலகச் செய்திகள் செய்திகள்

சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ஈழத்தமிழ் பெண்ணுக்கு கிடைக்கவுள்ள விருது!

இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்கள் குறித்த பேசுபொருள் அனைத்துலக அரங்கத்தில் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள நிலையில் இலங்கையின் மனித உரிமை ஆர்வலரும், வழக்கறிஞருமான ரனிதா ஞானராஜாவுக்கு அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு ‘தைரியமான பெண்மணி’ என்ற விருதை வழங்கியுள்ளது.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தால் நேற்று(04) உலகெங்கிலும் இருந்து விருது பெறுபவர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டிருந்ததில் அதில் ஒருவராக ரனிதா ஞானராஜாவும் இடம் பிடித்துள்ளார்.

சிறிலங்கா அரசாங்கத்தால் அச்சுறுத்தல்கள் மற்றும் சவால்கள் விடுக்கப்பட்டபோதிலும் ஒடுக்குமுறையால் பாதிக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளுக்காக ரனிதா ஞானராஜா தொடர்ந்தும் போராடி வருவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.

இலங்கையின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் பல ஆண்டுகளாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளுக்கு இலவச சட்ட உதவி உட்பட்ட சேவைகளை வழங்கும் நீதிக்காக ரனிதா ஞானராஜா தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளதாகவும் அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இவர்களுக்குரிய விருது வழங்கும் மெய்நிகர் நிகழ்வு எதிர்வரும் திங்கட்கிழமை(08) அமெரிக்க ராஜாங்க செயலாளர் அந்தனி பிளிங்களின் தலைமையில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நிலவை சுற்றி பயணம் செய்ய காதலியை தேடும் ஜப்பானிய கோடீஸ்வரர்

World News

வேதாரணியத்தில் படகில் மயங்கிய நிலையில் யாழ்.வாசி!

TamilTwin

அமெரிக்காவில் மட்டும் கொரோனாவுக்கு இரண்டு இலட்சத்து பத்தாயிரம் பேர் பலி

World News