நாம் நம் சருமத்தினை பாதுகாப்பதற்கு அதிக விலைக் கொடுத்து தான் வாங்க வேண்டிய அவசியம் இல்லை. நாம் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய சமையலில் உபயோகிக்கக்கூடிய பொருட்களே போதுமானது ஆகும். அத்தகைய பொருட்களில் கடலை மாவும் முக்கிய பங்கு வகிக்கிறது.

தூசியால் நமது சருமமும் கூந்தலும் அதிக பாதிப்புக்கு உள்ளாகிறது. இதனால் நமது சருமத்தில் கரும்புள்ளிகள் காணப்படுகின்றன. அதனை நாம் கடலை மாவின் மூலம் சரி செய்யலாம். எலுமிச்சை, மஞ்சள், கடலைப் பருப்பு, பாசிப்பருப்பு போன்றவற்றைப் பயன்படுத்தி முகத்தையும், சருமத்தையும் அழகாக்கலாம் எனக் கூறுகின்றனர் அழகியல் நிபுணர்கள்.
பழங்காலத்தில் இருந்தே சரும பராமரிப்பிற்காக கடலை மாவு மற்றும் மஞ்சள் தூள் இரண்டையுமே பயன்படுத்தி வந்து உள்ளனர். ஒரு கிண்ணத்தில் 2 ஸ்பூன் கடலை மாவை எடுத்துக் கொண்டு ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து கொண்டு நன்றாக கலக்கவும். சிறிதளவு தண்ணீர் ஊற்றி கலந்து முகத்தில் பூசி அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகம் கழுகி வந்தால் சருமம் மென்மையாகும்.