Tuesday, September 27, 2022
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்மகனின் உண்டியல் காசால் ஒரேநாளில் கோடீஸ்வரரான ஆட்டோ ஓட்டுநர்..

மகனின் உண்டியல் காசால் ஒரேநாளில் கோடீஸ்வரரான ஆட்டோ ஓட்டுநர்..

கேரளாவில் லாட்டரிச் சீட்டால் கூலித் தொழிலாளி ஒரே நாளில் கோடீஸ்வரராக ஆகியுள்ள சம்பவம் வைரலாகி வருகின்றது.

ஓணம் பண்டிகையின்போது லாட்டரிச் சீட்டு வெல்வோருக்கு 25 கோடி என கேரள அரசு அறிவித்தது.

திருவனந்தபுரத்தை அடுத்த ஸ்ரீவராகம் பகுதியைச் சார்ந்த அனூப் என்ற கூலித் தொழிலாளிக்கு விழுந்துள்ளது.

அதாவது வறுமை காரணமாக அடுத்த மாதம் வெளிநாட்டிற்கு சப்ளையர் வேலைக்குச் செல்ல இருந்தார் அனூப்.

ஆட்டோ ஓட்டுவதும் ஹோட்டல்களில் உணவு சப்ளை செய்வதும்தான் இவரது வேலை. கடன் சுமையால் தவித்து வந்த அனூப், ஓணம் பண்டிகை லாட்டரிச் சீட்டினை வாங்கியுள்ளார்.

அதாவது லாட்டரிச் சீட்டின் விலை 500 ரூபாய் என்ற போதில் அவர் கையில் 450 ரூபாய்தான் இருந்ததாம்.

இதனைத் தொடர்ந்து மகனின் உண்டியலில் இருந்து 50 ரூபாயை எடுத்தாராம்.

அதன்பின்னர் லாட்டரிச் சீட்டை வாங்கிய அனூப்புக்கு காத்திருந்ததோ இன்ப அதிர்ச்சிதான். மொத்தம் 25 கோடி என்ற நிலையில் மாநில அரசின் வரிபோக 14 கோடியே 25 லட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகின்றது.

RELATED ARTICLES

Most Popular