தமிழ் நடிகர் முரளியின் மகன் அதர்வா. இவர் தமிழ் திரைப்பட நடிகராக இருந்து வருகிறார். பாணா காத்தாடி படத்தின் மூலம் அறிமுகமானவர். 3 ஆண்டுகளுக்கு பிறகு கார்த்திக் சுப்புராஜின் ஜிகர்தண்டா படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிகர் அதர்வா ஹீரோவாக நடிக்கிறார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சித்தார்த், பாபி சிம்ஹா, விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் உள்ளிட்டோர் நடித்த படம் ஜிகர்தண்டா. கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியான இப்படம் மெகா ஹிட்டானது. இதில் ‘அசால்ட் சேது’ எனும் கதாபாத்திரத்தில் நடித்த பாபி சிம்ஹாவுக்கு, தேசிய விருது கிடைத்தது. இந்த படமே அவரது திரை வாழ்க்கைக்கு திருப்புமுனையாக அமைந்தது.

பெரும் வெற்றி பெற்ற இந்த படம் தெலுங்கில் ரீமேக்காகிறது. இதில் சித்தார்த் நடித்த வேடத்தில், அதர்வா நடிக்க உள்ளார். அசால்ட் சேதுவாக வருண் தேஜ் நடிக்க உள்ளார். லட்சுமி மேனன் நடித்த ரோலில் மிருணாலினி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.