fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

மீண்டும் இணையும் மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணி

                நடிகர் அருண் விஜய் நடிப்பில் தற்போது வெளிவந்த திரைப்படம் தடம்.  இப்படம் திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.  இப்படத்தினை இயக்குநர் மகிழ்திருமேனி இயக்கி இருந்தார்.   இதில் நாயகிகளாக தன்யா ஹோப், ஸ்மிருதி வெங்கட் ஆகியோர் நடித்து இருக்கின்றனர்.  ரசிகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில் தடம் படக்குழுவினர் திரைப்படம் ஓடும் திரை அரங்குகளுக்கு நேரடியாக சென்று ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகின்றனர்.  நெல்லை ராம் தியேட்டரில் தடம் படம் ஓடிக்கொண்டு இருக்கும் பொழுது படக்குழுவினர் அங்கு வந்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

மீண்டும் இணையும் மகிழ் திருமேனி அருண் விஜய் கூட்டணி

      அப்பொழுது நடிகர் அருண் விஜய் கூறியதாவது, தற்போது நான் அக்னிச் சிறகுகள், பாக்சர் ஆகிய படங்களில் நடித்து வருகிறேன்.  இப்படங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.  மீண்டும் இயக்குநர் மகிழ் திருமேனி உடன் இணைய உள்ளேன் அதற்கான அறிவிப்பு இந்த வருடம் இறுதியில் வரும் என அவர் கூறி உள்ளார்.  இதனை தொடர்ந்து நடிகர் அருண் விஜய் உடன் ரசிகர்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

Related posts

‘திரெளபதி’ படத்தின் தொலைக்காட்சி உரிமத்தை வாங்கிய விஜய் தொலைக்காட்சி..!

TamilTwin India

‘அட்றா அட்றா அட்றா’ என்று விஜய் என்னை பாராட்டினார் சாந்தனு நெகிழ்ச்சி !

TamilTwin India

பாபிசிம்ஹாவின் அடுத்த படம், டைட்டிலை அறிவித்த கார்த்திக் சுப்புராஜ்..!!

TamilTwin India