fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

மீண்டும் போலிஸாக நடிக்கும் அருண் விஜய்

    அருண் விஜய் முதலில் குற்றம் 23 படத்தில் போலிஸாக நடித்து இருந்தார்.  இப்படத்தினை அறிவழகன் வெங்கடாச்சலம் இயக்கி இருந்தார்.  இப்படத்தினைத் தொடர்ந்து மீண்டும் ஒரு படத்தில் போலிஸாக நடிக்க இருக்கிறார்.  இப்படத்தினை கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்க உள்ளார்.  தற்போது அவர் நடித்த தடம் என்ற திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது.  அருண் விஜய் தற்போது அக்னி சிறகுகள், சாஹோ உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.  பாஸ்கர் என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளார். 

      இயக்குநர் கண்ணன் மற்றும் இயக்குநர் மிலனிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்த  கோபிநாத் நாராயணமூர்த்தி இயக்க இருக்கின்ற படத்தில் போலிஸாக நடிக்க இருக்கிறார்.  இது பற்றி அருண் விஜய் கூறியதாவது, இப்படத்தில் பல அற்புதமான திருப்பங்கள் நிறைந்து உள்ளது.  மேலும் கதையும் சிறப்பாக இருந்ததாக அவர் கூறி உள்ளார்.  இந்த படம் நகரத்தில் தொடர்ச்சியாக நடக்கும் மர்மமான கொலைகளைப் பற்றியும், அவற்றின் பின்னணியில் உள்ள மர்மத்தை பற்றியும் எடுக்கப்பட்ட கதை ஆகும்.  நடிகர்கள் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களைத் தேர்வு செய்யும் இறுதி பணி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்து உள்ளார்.

Related posts

‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியில் ஷகிலா..!! எதிர்பாராத அறிவிப்பு..!!

TamilTwin India

பிரித்விராஜ் பட தெலுங்கு ரீமேக் உரிமையை கைப்பற்றிய ஜெர்ஸி பட தயாரிப்பாளர் !

TamilTwin India

சாக்சி அகர்வாலின் உச்சகட்ட கவர்ச்சி, வைரலாகும் புகைப்படங்கள் !

TamilTwin India