Tuesday, August 16, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்இனப்படுகொலையாளி கோட்டாவைக் கைது செய்: யாழ்.நகரில் சுவரொட்டிகளால் பரபரப்பு(Photos)

இனப்படுகொலையாளி கோட்டாவைக் கைது செய்: யாழ்.நகரில் சுவரொட்டிகளால் பரபரப்பு(Photos)

இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும், தமிழ் இனப் படுகாலையாளியுமான கோட்டபாய ராஜபக்சவை சிங்கப்பூர் அரசு கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தித் தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையால் நேற்றுப் புதன்கிழமை(03.8.2022) இரவோடு இரவாக யாழ்.நகர் எங்கும் பரவலாகச் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இனப்படுகொலையாளி கோட்டாவைக் கைது செய்‘ எனத் தமிழிலும், Arrest Gota For Genocide, Crime Aganist Humanity And War Crimes என ஆங்கிலத்திலும் குறிப்பிடப்பட்டு அவரது புகைப்படத்துடன் குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

இதேவேளை, புலனாய்வாளர்கள், படைத் துறைகளின் கண்களில் அகப்படாதவாறு மேற்படி சுவரொட்டிகள் இரவோடிரவாக ஒட்டப்பட்டுள்ள நிலையில் குறித்த சுவரொட்டிகளால் யாழ்.நகரில் ஒருவித பரபரப்பு ஏற்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்க்கது.

(செய்தித் தொகுப்பு:- எஸ்.ரவி)

RELATED ARTICLES

Most Popular