தாதா 87, இப்படம் சமீபத்தில் வெளியாகி திரை அரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. தாதா 87 படத்தினை கலை சினிமாஸ் நிறுவனம் தயாரித்து உள்ளது. விஜய் ஸ்ரீ இயக்கி உள்ளார். இத்திரைப்படம் மார்ச் 1 வெளியானது. இதில் சாருஹாசன், ஜனகராஜ், சரோஜா, ஆனந்த் பாண்டி, ஸ்ரீ பல்லவி ஆகியோர் நடித்து உள்ளனர்.

இப்படத்தில் ஸ்ரீ பல்லவி திருநங்கை வேடத்தில் நடித்து இருந்தார். இது பலரையும் ஆச்சர்யப்பட வைத்து உள்ளது. இதுவரை திரைத்துறையில் ஒரு ஆண் பெண் வேடத்திலும் ஒரு பெண் ஆண் வேடத்தில் நடித்து உள்ளனர். ஆனால் ஒரு பெண் திருநங்கையாக நடித்து உள்ளது இதுவே முதல் முறை ஆகும். இதுவே இப்படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்துள்ளது. இத்திரைப்படம் பல்வேறு விமர்சனங்களை பெற்று உள்ளது. ஸ்ரீ பல்லவியின் இந்த முயற்சிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். தாதா 87 புதிய கோணத்தில் காதலை சொல்லிய விதம் அனைவரையும் கவர்ந்து உள்ளது. இது அனைவருடைய கைத்தட்டலையும், பாராட்டுக்களையும் பெற்று வருகிறது.