fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பாடகி பி.சுசீலாவுக்கு பாராட்டு விழா

இந்தியாவின் திரைப்படப் பிண்னணி பாடகி பி.சுசீலா. இவர் தமிழ் தெலுங்கு, கன்னடம் மலையாளம் போன்ற மொழிகளில் 40 ஆண்டுகளாக பல பாடல்களை பாடியுள்ளார். சென்னை பல்கழைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் பாராட்டு விழா நடத்தப்படுகிறது.

பாடகி பி.சுசீலாவுக்கு பாராட்டு விழா

     பின்னணி பாடகி பி.சுசீலா திரைத் துறையில் 65 ஆண்டுகள் கடந்து விட்ட நிலையில் அவரின் இசைப் பணியைப் போற்றும் விதமாக பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. 1953 ஆம் ஆண்டு பெற்ற தாய் படத்தின் வாயிலாக தமிழ் திரையுலகில் பாடகியாக அறிமுகமானவர். சினிமாவுக்கு வந்து 65 ஆண்டுகளைக் கடந்துவிட்ட அவருக்கு தற்போது வயது 84 ஆகிறது. இவரது இசை பயணத்தை போற்றிடும் விதமாக இவருக்கு  லயா மீடியா சார்பாக அவரது தீவிர ரசிகரான வீரசேகர் பாராட்டு விழா நடத்த இருக்கிறார்.

     மத்திய அரசு அவருக்கு பத்மபூஷண் விருதை வழங்கியது. 5 முறை தேசிய விருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார் இந்த பாராட்டு விழா மே 19 ம் தேதி சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு கலையரங்கத்தில் நடைபெறவுள்ளது. இந்த விழாவில் திரை நட்சத்திரங்களும் இசை ஆளுமைகளும் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.

Related posts

யாஷிகாவை வெளுத்து வாங்கும் ரசிகர்கள், 3000 இருந்த போதுமா !

TamilTwin India

விஷால் படம் எடுத்தால் தயாரிப்பாளர்கள் காலி- கே.ராஜன் பேட்டி!!

N N

அமெரிக்கா உலகத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றார் குஷ்பூ !

TamilTwin India