இந்தியாவில் படித்த இளைஞர்களின் வேலைவாய்ப்பினை அதிகரிக்கச் செய்யும் பொருட்டு இந்திய அரசு அக்னிபாத் என்ற திட்டத்தினை சமீபத்தில் அறிமுகம் செய்தது.
அதாவது பெருகிவரும் வேலைவாய்ப்புத் திண்டாட்டத்தைக் குறைக்கும் வகையில் இந்தத் திட்டமானது இருக்கும் என்று ஒரு தரப்பினர் இதனை வரவேற்றாலும் மறுபுறம் இந்த அக்னிபாத் திட்டத்திற்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பி வருகின்றன.
அதாவது இந்திய ராணுவத்தின் முப்படைகளான தரைப்படை, விமானப்படை, கடற்படைகளில் ஒப்பந்த அடிப்படையில் பணியானது நிரப்பப்பட உள்ளது.
இந்த ஒப்பந்த பணியிடங்களுக்கு 17 அரை வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டது.
மேலும் இதற்கான விண்ணப்பங்கள் ஜூன் 24 ஆம் தேதியான இன்று முதல் துவங்கியுள்ளது.
இன்று காலை 10 மணிக்குத் துவங்கி ஜூலை 5 ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
12 ஆம் வகுப்பு படித்தவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை எனப் பலரும் அக்னிபாத் திட்டத்தின் கீழ் இந்திய ராணுவத்தில் பணியாற்ற ஆர்வம் காட்டி வருகின்றனர்.