விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் 2018- ம் ஆண்டு வெளிவந்த 96 திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. அதேபோல், பல விருதுகளையும் வென்றது. வணிக ரீதியான வெற்றியையும் பெற்றது. தற்போது 96 படம் ரீமேக் செய்யப்படுகிறது. இந்த படத்தில் சமந்தா, சர்வானந்த் நடிக்க 96 தெலுங்கு ரீமேக் வேலைகளும் நடந்து வருகிறது. இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் பிரபலமாக நடித்து வரும் நடிகரும், இயக்குநருமான மாருதி ராவ்வின் மகனான அமரர் கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் அவர்கள் நினைவாகக் கொடுக்கப்படும் சிறந்த அறிமுக இயக்குனருக்கான விருதை 96 படத்திற்காக இயக்குநர் பிரேம் குமார் அவர் பெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஸ்ரீனிவாசன் என்பவர் 1992 இல் தனது முதல் படமான பிரமேபுஸ்தகம் என்னும் படத்தை இயக்கும்போது காலமானார். ஸ்ரீனிவாசன் காலமானதை தொடர்ந்து அப்படத்தை மாருதி ராவ் என்பவர் இயக்கி முடித்தார். ஸ்ரீநிவாஸ் அவரது நினைவாக நடத்தப்படும் ‘கொல்லாப்புடி ஸ்ரீனிவாஸ் தேசிய விருது’ விழா கடந்த 21 வருடங்கள் தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது. 2001- ம் ஆண்டுக்கு பிறகு இவ்விருதை வென்ற முதல் தமிழ் படம் 96 படம் என கூறப்படுகிறது.