தனியார் வைத்தியசாலையில் கைக்குண்டு மீட்கப்பட்டது தொடர்பில் மற்றுமொருவர் கைது

நாரஹேன்பிட்டியவில் உள்ள தனியார் வைத்தியசாலையின் முதலாவது மாடியில், மலசலக்கூடத்தில் இருந்து எடுக்கப்பட்ட கைக்குண்டு விவகாரம் தொடர்பில் மற்றுமொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் அறிவித்தார்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால், மஹவ, குருநாகல் பகுதியில் வைத்தே 18 தோட்டாக்களுடன் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது