முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர், அல்பிரேட் துரையப்பா உள்ளிட்ட ஒன்பது பேரை மாவீரர்களாகச் சித்தரித்து யாழ்.கொக்குவிலில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மாவீரர் வாரத்தை முன்னிட்டு ஒட்டப்பட்டுள்ள குறித்த சுவரொட்டிகளில் ஒன்பது பேரினதும் புகைப்படங்கள் பொறிக்கப்பட்டுள்ளதுடன் சுவரொட்டியை ஒட்டியவர்கள் யார்? என்ற விபரம் அதில் குறிப்பிடப்படவில்லை.
(செய்தித் தொகுப்பு மற்றும் படம்:- செ.ரவிசாந்)