fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

தனியார் துறைகளில் தொழில்வாய்ப்புக்களை எதிர்பார்த்து காத்திருப்போருக்கான அறிவிப்பு!

தொழில் வாய்ப்பின்றி இருக்கும் இளைஞர், யுவுதிகள், தமது பெயர்களை மாவட்ட செயலகங்களில் அமைக்கப்பட்டுள்ள மாவட்ட தொழில் கேந்திர நிலையங்களில் பதிவு செய்துகொள்ளுமாறு, இளைஞர் விவகாரம் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் கீழ் இயங்கும் மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களம் அறிவித்தல் விடுத்துள்ளது.

இது தொடர்பில் மனிதவள மற்றும் வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அனுஷா கோகுலா கூறுகையில், தொழில் வாய்ப்புக்களை எதிர்பார்க்கும் இளைஞர், யுவதிகளை, தனியார் துறைகளிலுள்ள தொழில் வெற்றிடங்களில் நியமிக்க முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, தனியார் துறைகளில் தொழில்வாய்ப்புக்களை எதிர்பார்த்து காத்திருப்போர், மனிதவலு மற்றும் வேலைவாய்ப்பு திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.dome.gov.lk இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, பதிவு செய்துகொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related posts

கொரோனா: உலகம் முழுவதும் பாதிப்பு எண்ணிக்கை 54 லட்சத்தை தாண்டியது

World News

சமூக ஊடகங்களை கண்காணிக்க வருகிறது புதிய நடைமுறை!

World News

யாழ். குப்பிழான் தெற்கில் அதிகாலை வேளையில் நடந்த கொள்ளை: மீட்கப்பட்டது நீரிறைக்கும் இயந்திரம்!!(Photos)

TamilTwin