fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ஆண்ட்ரியாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்

ஆண்ட்ரியா பின்னணிப் பாடகியாகவும், பின்னணிக் குரல் கொடுப்பவராகவும் நடிகையுமாக இருக்கிறார். இவர் சினிமாவிற்கு பாடகியாக அறிமுகமானார். பச்சைக்கிளி முத்துச்சரம் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமான இவர் வலைத்தளத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்களை தெரிவித்து இருக்கிறார்கள்.

     சினிமாவிற்கு ஆண்ட்ரியா வந்த புதிதில் அவர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கினார். ஆண்ட்ரியா ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, சகுனி, இது நம்ம ஆள போன்ற பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இருந்தாலும் தரமணி படம் அவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத் தந்தது. கமலுடன் விஸ்வரூபம் 2 படத்திலும், தனுஷ் உடன் வடசென்னை படத்திலும் நடித்தார். இந்த வருடம் கா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆண்ட்ரியா கவர்ச்சியாகவும் நடிக்கிறார். நடிப்பு தவிர பாடகியாகவும் தன்னை வெளிப்படுத்தும் ஆண்ட்ரியா அவ்வப்போது பாடல் ஆல்பங்கள் வெளியிடுக்கிறார்.

ஆண்ட்ரியாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு ரசிகர்கள் கமெண்ட்

     வலைத்தளத்தில் தனது புகைப்படத்தை வெளிப்படுத்தி வருவார். இதை போல் தற்சமயம் பட்டன் போடாத டாப்ஸ் அணிந்து கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டிருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள் அவரது தோற்றத்துக்கு ஏற்ப கவர்ச்சி வேடத்தை அவருக்கு இயக்குனர்கள் யாராவது தாருங்களேன் என்று கமெண்ட் செய்து இருக்கிறார்கள். சிலர் அவர் வெளியிட்ட படத்திற்கு எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்கள்.

.

Related posts

ஒற்றை கையில் சிலம்பம், தெறிக்கவிடும் சாக்சி !

TamilTwin India

இந்தப்படமாவது வெற்றிபெறுமா நிவின்பாலி பட இயக்குனர் ஏக்கம்

TamilTwin India

புல்லட் ராணியாக மரியா சோனாக்ஷி சின்கா

TamilTwin India