பஸ் ஸ்டாப் என்னும் தெலுங்குத் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஆனந்தி. வெற்றிமாறன் தயாரிப்பில் வெளியான பொறியாளன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். ஆனந்தி ஒரு படத்தில் பிக் பாக்கெட் அடிக்கும் பெண்ணாக நடித்துள்ளார்.
இயக்குனர் நவீன் ‘மூடர் கூடம்’ படத்தின் மூலம் இயக்குநராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதையடுத்து சமுத்திரக்கனியை ஹீரோவாகவும், சங்கவியை ஹீரோயினியாகவும் வைத்து ‘கொளஞ்சி’ என்ற படத்தை தயாரித்தார் இயக்குனர் நவீன். இந்தப் படத்தை தனராம் சரவணன் இயக்கியிருந்தார். படம் தயாராகி பல வருடங்கள் ஆகியும் இன்னும் வெளியாகவில்லை. இந்நிலையில், இயக்குனர் நவீன் விஜய் ஆண்டனியை வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இந்தப் படத்தை, அம்மா கிரியேஷன்ஸ் டி.சிவா தயாரிக்கிறார். இதற்கிடையில், இயக்குனர் நவீன் ஒரு படத்தை இயக்கி, அதில் ஹீரோவாகவும் நடித்து விட்டாராம். இந்தப் படத்தில் நவீனுக்கு ஜோடியாக ‘கயல்’ ஆனந்தி நடித்துள்ளார். இந்தப் படத்தைப் பற்றி எந்தத் தகவலும் வெளியாகவில்லை. இந்தப் படம் முழுக்க முழுக்க வெளிநாட்டிலேயே எடுக்கப்பட்டதாம். இந்தப் படத்தில், நடிகை ‘கயல்‘ ஆனந்தி பிக் பாக்கெட் அடிக்கும் பெண்ணாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.