fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

ஆனந்தசங்கரி நலம் பெறுவதற்கு பிரித் ஓதி நூல் கட்டிய ஆனந்த தேரர்

தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி நலம் பெற வேண்டி அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தொட்டுவே ஆனந்த தேரர் பிரித் ஓதி, நூல் கட்டி ஆசி வழங்கியுள்ளார்.

ஆனந்தசங்கரி திடீர் சுகயீனம் காரணமாகக் கடந்த வாரம் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்ட பின்னர், வீடு திரும்பிய அவரை இன்று (17) மாலை அவரது வீட்டுக்குச் சென்ற அபயராம விகாரையின் விகாராதிபதி முருத்தொட்டுவே ஆனந்த தேரர் நலம் விசாரித்ததுடன், விரைவில் நலம் பெற ஆசி வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

இராணுவத்தினரால் தேடப்பட்டு வந்த முன்னாள் போராளி பருத்தித்துறை பொலிஸ் நிலையத்தில் சரண்

World News

மரணதண்டனை அமுலுக்கு எதிராக ரிட் மனு!!

TamilTwin

யாழ். குடாநாட்டின் பல பகுதிகளிலும் நாளை மின்தடை!

TamilTwin