யாழ்.ஆனைக்கோட்டை சாவற்கட்டு அந்திக்குழி ஸ்ரீ ஞானவைரவர் காளி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று சனிக்கிழமை (21.5.2022) முற்பகல்-10.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
தொடர்ந்தும் பத்துத் தினங்கள் காலை, மாலை உற்சவங்களாக இவ்வாலய மஹோற்சவம் நடைபெறவுள்ளது.
இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்- 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை மாலை-4 மணிக்கு வேட்டைத் திருவிழாவும், 28 ஆம் திகதி சனிக்கிழமை இரவு-8 மணிக்குச் சப்பரத் திருவிழாவும், 29 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தேர்த் திருவிழாவும், மறுநாள் திங்கட்கிழமை முற்பகல்-10 மணிக்குத் தீர்த்தத் திருவிழாவும், அன்றையதினம் இரவு-7 மணிக்கு கொடியிறக்க உற்சவமும் நடைபெறும் என மேற்படி ஆலய பரிபாலன சபையினர் தெரிவித்துள்ளனர்.
இவ்வாலயக் கொடியேற்றம், தேர், தீர்த்தத் திருவிழா நாட்களில் காலை உற்சவம் காலை-6 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாகும். ஏனைய நாட்களில் காலை உற்சவம் காலை-8 மணிக்கு அபிஷேகத்துடன் ஆரம்பமாக உள்ளதுடன் மாலை உற்சவம் தினமும் மாலை-5 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் ஆலய பரிபாலன சபையினர் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)