Friday, February 3, 2023
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 11 மாதக் குழந்தை.. யெப்பா வேற லெவல்தான்!

உலக சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்த 11 மாதக் குழந்தை.. யெப்பா வேற லெவல்தான்!

இந்தியாவின் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே 11 மாதக் குழந்தை தன்னுடைய அம்மா சொல்லச் சொல்ல 233 பொருட்களை தொட்டு அடையாளம் காட்டி உலகச் சாதனைப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே உள்ள பாகோடு தேனாம்பாறை என்ற ஊரைச் சார்ந்தவர்கள் பெரின்ஹாம்- தியான்ஷா தம்பதியினர்.

இவர்களுக்கு அக்சி ஹேர்மின் என்ற 11 மாத ஆண் குழந்தை உள்ளது. குழந்தைக்கு பிறந்த 6 மாதத்திலேயே வீட்டில் உள்ள பொருட்களின் பெயரைச் சொல்லிக் கொடுத்து வந்துள்ளனர் பெற்றோர்.

குழந்தை பெற்றோர் சொல்வதை அப்படியே நினைவில் கொண்டு பெற்றோர் சொல்லும்போது அடையாளம் காட்டி வந்துள்ளது.

குழந்தைக்கு விளையாட்டுப் போக்கில் பெற்றோரும் 233 பொருட்களின் பெயர்களைச் சொல்லிக் கொடுத்துள்ளனர்.

அதன்பின்னர் குழந்தையிடம் பொருட்களின் பெயரைக் கேட்க குழந்தை அழகாக அடையாளம் காட்டியுள்ளது.

மேலும் பொருட்களின் பெயரைச் சொன்னால் அதற்கேற்ப எடுத்துப் பயன்படுத்தவும் செய்துள்ளது.

இதனைக் குழந்தையின் பெற்றோர் வீடியோ எடுத்து அனுப்ப உலகச் சாதனைப் புத்தகத்தில் குழந்தையின் பெயர் இடம்பெற்றுள்ளது.

11 மாதக் குழந்தையின் இந்த நினைவுத் திறன் குறித்து பொதுமக்கள் குழந்தைக்கும், குழந்தையைப் பயிற்றுவித்த பெற்றோருக்கும் தங்களது வாழ்த்துகளைக் கூறி வருகின்றனர்.

RELATED ARTICLES

Most Popular