fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
தென் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் அமமுக
இந்தியச் செய்திகள்

தென் மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தும் அமமுக

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது என்ற தகவல் அண்மையில் வெளியானது. அதன்படி தமிழகத்தில் காலியாகவுள்ள 21 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 18 தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் அதிமுக அமமுகவிற்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய மூன்று தொகுதிகளில் வழக்கு நிலுவையில் இருப்பதால் அங்கு இப்போது தேர்தல் இல்லை.

அதிமுகவைப் பொறுத்தவரை, 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 10 – க்கும் அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதனால் வட மாவட்டங்களில் பாமகவுக்கு 7 மக்களவைத் தொகுதிகள் மற்றும் ஒரு மாநிலங்களவைத் தொகுதியையும் கொடுத்து அதிமுக கூட்டணியை உறுதி செய்ததாக தகவல் வெளியாகியது.

வட மாவட்டங்களைப் போலவே, தென் மாவட்டங்களில் உள்ள 7 தொகுதிகள் இடைத்தேர்தலும் அதிமுகவுக்கு மிக முக்கியம். எனவே தென் மாவட்டங்களில் கணிசமான வாக்கு உள்ள மக்களவைத் தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்த தினகரன் தரப்பு முடிவெடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன் மூலம் அந்த மக்களவைத் தொகுதிகளில் வெற்றி பெறுவதுடன், அதற்குட்பட்ட சட்டப்பேரவைத் தொகுதிகளில் வெற்றி பெற்று அதிமுக அரசு தொடராமல் தடுக்க முடியும் என அமமுக தினகரன் நம்புவதாகத் தெரிகிறது.

எனவே அதற்கு ஏற்ப தென் மாவட்ட தொகுதிகளில் அமமுகவின் பிரச்சாரங்கள் கூடுதல் கவனத்துடன் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Related posts

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு தொடங்கியது

N N

சீனாவுக்கு மருந்து பொருட்களை அனுப்புகிறது இந்தியா

World News

நித்தியானந்தா இப்போது எங்கிருக்கிறார்?

World News