fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

தமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருத்தம் தெரிவித்த அமித்ஷா

பா.ஜ.க. அரசியல் தலைவரும், மத்திய உள்துறை அமைச்சருமான அமித் ஷா 2 நாட்கள் தமிழகத்திற்கு அரசு முறைப் பயணமாக சுற்றுப் பயணம் வந்துள்ளார். தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர், மற்ற பிற அமைச்சர்கள், அதிமுக, பாஜக அரசியல் பிரமுகர்கள், தொண்டர்கள் எனப் பலரும் அவரை விமான நிலையத்தில் வரவேற்றனர்.

சென்னை வந்துசேர்ந்த பின்னர் அமித்ஷா தனது ட்விட்டர் பக்கத்தில், “சென்னை வந்தடைந்தேன்! தமிழகத்தில் இருப்பது மகிழ்ச்சியான விஷயமாகும். இன்று அரசு நிகழ்ச்சிகள் மூலம் என்னுடைய்= அன்புக்குரிய தமிழக சகோதர சகோதரிகளிடையே உரையாற்றவுள்ளேன்” என்று பதிவிட்டு இருந்தார்.

தமிழ் மொழியில் பேச முடியாததற்கு வருத்தம் தெரிவித்த அமித்ஷா

அமித்ஷா ஹோட்டலில் சென்று ஓய்வு எடுத்ததுடன் சென்னை கலைவாணர் அரங்கத்தில் பாஜக, அதிமுக அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் நடைபெற்ற விழாவில் அமித்ஷா கலந்துகொண்டு இதுகுறித்து உரையாற்றினார். 

மேலும் அங்கு நடைபெற்ற விழாவில் பல்வேறு நலத்திட்ட பணிகள் தொடக்கத்திற்கான அடிக்கல் நாட்டினார்.

மேலும் அந்த நிகழ்ச்சியில் பேசிய அமித்ஷா, “உலகின் தொன்மையான மொழியான தமிழ் மொழியில் பேச முடியாமல் போன காரணத்திற்காக வருந்துகிறேன்” என்று கூறியுள்ளார்.

Related posts

தமிழகத்தில் மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த நோயினால் பாதிப்பு! சுகாதாரத்துறையினர் எச்சரிக்கை

World News

தமிழில் ஒலித்த மந்திரம்.. வட்டமிட்ட கருடன்… விண்ணைப் பிளந்த ஓம் நமசிவாய! தஞ்சாவூர் விழாக் கோலம் (Video)

World News

கொரோனா: ‘குவைத் ஏா்லைன்ஸ்’ விமானம் சென்னையில் ரத்து

World News