தமிழ்வாணன் இயக்கத்தில் எஸ். ஜே. சூர்யா, அமிதாப் பச்சன் நடிக்கும் படம் உயர்ந்த மனிதன். திருச்செந்தூர் முருகன் நிறுவனம் தயாரிப்பில் அமிதாப் பச்சன் தமிழில் நடிக்கும் படம் இது.
இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டுள்ள நிலையில் ட்விட்டரில் அமிதாப் சில புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்களில் அவரும் எஸ்.ஜே. சூர்யாவும் உள்ளார்கள். அவர்கள் இருக்கும் வீட்டின் சுவற்றில் சிவாஜியின் புகைப்படம் மாட்டப்பட்டுள்ளது. இதை வைத்து ட்விட்டரில் அமிதாப் பச்சன் கூறியதாவது,

“இவரின் புகழ் உலகமெங்கும் பரவியது, ஆனால் இவர் வெகு விரைவிலேயே நம்மைவிட்டு பிரிந்துவிட்டார். நடிகர் திலகம் என்று இவருக்கு கொடுத்த பட்டத்தை யாராலும் எதிர்க்க முடியாது. அந்த அளவிற்கு எல்லா விதமான வேடத்திற்கும் ஒரு முன் உதாரணமாக இருப்பார். சிவாஜி கணேசன் என்ற மாஸ்டரின் கீழ் அவரது சீடர்களாகிய நானும் சூர்யாவும் உள்ளோம். தமிழ் சினிமாவில் பொக்கிஷம் சிவாஜி கணேசன். அவருடைய படத்தை சுவரில் மாட்டி அவரது பாதம் தொட்டு வணங்கி மரியாதை செய்தோம். அவர் மாஸ்டர், நாம் அவருடைய சீடர்கள்” என்று பதிவு செய்துள்ளார்.