இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவர் போனி ஹோர்பாக் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் அம்பலவாணர் சிவபாலசுந்தரனை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இரண்டு நாள் விஜயமாக வடமாகாணத்திற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்த நெதர்லாந்து தூதுவர் நேற்றுச் செவ்வாய்க்கிழமை (24.01.2023) காலை யாழ்.மாவட்டச் செயலகத்திற்கு விஜயம் செய்தார்.
சுமார் ஒரு மணிநேரம் இடம்பெற்ற குறித்த சந்திப்பின் போது பெண் தலைமைத்துவக் குடும்பங்களின் தற்போதைய நிலைமைகள், நெதர்லாந்து அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் வேலைவாய்ப்பின்றிருக்கும் இளைஞர், யுவதிகளின் நிலைமைகள் என்பன தொடர்பில் கேட்டறிந்து கொண்டார்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)