fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » வறட்சியான சருமத்தை சரிசெய்யும் கற்றாழை ஃபேஸ்பேக்!!
அழகு

வறட்சியான சருமத்தை சரிசெய்யும் கற்றாழை ஃபேஸ்பேக்!!

வறட்சியான சருமம் உடையவர்கள் அதிக அளவில் கெமிக்கல் கலந்த பொருட்களையே பயன்படுத்துவர். ஆனால் நாம் இப்போது இயற்கையான முறையில் வறட்சியான சருமத்திற்கு தீர்வு காண்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க.

வறட்சியான சருமத்தை சரிசெய்யும் கற்றாழை ஃபேஸ்பேக்!!

தேவையானவை:

கற்றாழை- 1 துண்டு

வெள்ளரிக்காய்- 1 துண்டு

எலுமிச்சை பழம்- ½

செய்முறை:

1.           வெள்ளரிக்காயினை சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும். கற்றாழையின் தோலைச் சீவி சிறு சிறு துண்டுகளாக சதைப் பற்றினை வெட்டவும்.

2.           அடுத்து மிக்சியில் வெள்ளரிக்காய் துண்டுகள் மற்றும் கற்றாழைத் துண்டுகளைப் போட்டு அரைக்கவும்.

3.           இறுதியில் எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு பிழிந்து சேர்த்துக் கலந்தால் கற்றாழை ஃபேஸ்பேக் ரெடி.

இந்த கற்றாழை ஃபேஸ்பேக்கினை முகத்தில் மட்டுமல்லாது வறட்சியாக உள்ள கை, கால்களில் அப்ளை செய்து குளிர்ந்த நீரால் கழுவினால் வறட்சியான சருமம் நாளடைவில் சரியாகும்.

Related posts

தலைமுடி உதிர்வு என்ற பேச்சுக்கே இனி இடமில்லை!!

N N

முக அழகிற்கு கியாரண்டி… செமயான பாதாம் ஃபேஸ்பேக்!!

TT Media

கரும்புள்ளிகளை நீக்கும் எலுமிச்சை

N N