fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள் செய்திகள்

அடுத்த நிதி ஆண்டில் 16 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

20-21-ம் நிதி ஆண்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும். எனவே இந்த நிதி ஆண்டில் சுமார் 15.8 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாரத ஸ்டேட் வங்கியின் பொருளாதார ஆராய்ச்சித் துறை ஒரு ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

தொழிலாளர் சேமநல நிதி நிறுவன தகவல்படி 2019-20-ம் நிதி ஆண்டில் இந்தியாவில் 89.7 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டது. மாதம் ரூ.15 ஆயிரம் வரை சம்பளம் பெறும் இந்த தொழிலாளர்கள் தேசிய ஓய்வூதிய திட்டத்தில் சேருவார்கள். இதில் மத்திய, மாநில அரசுகள் மற்றும் தனியார் வேலைவாய்ப்புகள் வராது. 20-21-ம் நிதி ஆண்டிலும் இந்தியாவின் பொருளாதாரம் 5 சதவீதத்திலேயே நீடிக்கும். எனவே இந்த நிதி ஆண்டில் சுமார் 15.8 லட்சம் வேலைவாய்ப்புகள் குறையும். தேசிய ஓய்வூதிய திட்டத்தின் மத்திய, மாநில அரசு வேலைவாய்ப்புகளிலும் 39 ஆயிரம் வேலைவாய்ப்புகள் குறையும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

15 வயதான இந்து சிறுமியை கடத்தி கட்டாய மத மாற்றம் செய்து திருமணம் செய்த கொடூரம்

World News

மறைந்த நெல் ஜெயராமன் பெயரில் நீடாமங்கலத்தில் நெல் பாதுகாப்பு மையம்

World News

எனக்கு வேறு வழி தெரியவில்லை: முடிவு கவலைக்குரியது!- கவலையில் ஹரி (Video)

World News