fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

சருமத்தை அழகுடன் பொலிவாக்கும் பாதாம் பேஸ் பேக்

பாதாமில் உள்ள புரதச்சத்தும், உடலுக்குத் தேவையான ஃபேட்டி ஆஸிட்டிஸ் மற்றும் விட்டமின் ஈ மற்றும் மக்னீசியம் ஆகியவை நம்முடைய உடல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியம். பாதாம் விட்டமின் ஈ நிறைந்த ஒன்று. இது உங்களின் சருமத்தை வறண்டு போகாமல் வைத்துக் கொள்ளும். உங்கள் சருமத்தை சுருக்கம் இல்லாமல் இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க உதவுகிறது.  இதோ பாதாம் பருப்பை வைத்து வீட்டிலே செய்ய எளிமையான  பேஸ் பேக் செய்முறையை உங்களுக்குத் தருகிறது. சருமத்தை இளமையாகவும் அழகாகவும் வைத்திருக்க இது நிச்சயம் உதவும்.

சருமத்தை அழகுடன் பொழிவாக்கும் பாதாம் பேஸ் பேக்

பாதாம் மற்றும் பால் கலந்த பேஸ் மாஸ்க்

1 டேபிள் ஸ்பூன் பாதாம் பவுடர்

2 டேபிள் ஸ்பூன் காய்ச்சாத பால்

    ஒரு பவுலை எடுத்துக் கொள்ளுங்கள் மேலே சொன்ன இரண்டு பொருட்களையும் கலந்து திக் பேஸ்ட்டாக வைத்துக் கொள்ளுங்கள். வெதுவெதுப்பான தண்ணீரில் முகம் கழுவிவிட்டு முகத்திலும் கழுத்திலும் இந்த பேஸ்பேக்கை  போடவும். 20 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவவேண்டும். இதை உங்களில் கை மற்றும் கால்களில் கூட இந்த மாஸ்க்கை பயன்படுத்தலாம். இவ்வாறு செய்தால் சருமம் பொலிவகும்.

Related posts

முகச் சுருக்கத்தை தடுக்கும் மாம்பழ பேஸ் பேக்

N N

புருவங்களை அடர்த்தியாக்க இதோ உங்களுக்கான டிப்ஸ்!!

N N

கரு கரு கூந்தலுக்கு நெல்லிக்காய் எண்ணெய்!!

N N