fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

அஜித்தின் நேர்கொண்ட பார்வை சனிக்கிழமை வெளியாக உள்ளது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தல அஜித், அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானர். இவர் பல படங்களை நடித்துள்ளார் இதை தொடர்ந்து நேர்கொண்ட பார்வை என்கிற படத்தின் பூஜை டிசம்பர் மாதம் தொடங்கியது.

      சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று படங்களை இயக்கிய வினோத், அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கி வருகிறார். ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக்காக நேர்கொண்ட பார்வை என்கிற படம் உருவாகி வருகிறது. அமிதாப் பச்சன் நடித்த வேடத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்தப் படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரித்து வருகிறார். டிசம்பர் மாதம் இப்படம் பூஜையுடன் தொடங்கியது.

அஜித்தின் நேர்கொண்ட பார்வை சனிக்கிழமை வெளியாக உள்ளது

               இந்த படத்தில் யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். பிரபல பாலிவுட் நடிகை நிரவ் ஷா-வும், தமிழ் பெண்ணுமான வித்யா பாலன் இப்படத்தின் மூலம் முதல்முறையாக தமிழில் அறிமுகமாகிறார்கள்.

இந்நிலையில் நேர்கொண்ட பார்வை படம் ஆகஸ்ட் 10 அன்று வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படம் ஆகஸ்ட் 10 சனிக்கிழமையன்று வெளியாக உள்ளது.

Related posts

அரசியல் போஸ்டர் அடிக்காதிங்க, ரசிகர்களுக்கு ரஜினி உத்தரவு..!!

TamilTwin India

எனக்கும் பாலியல் அத்துமீறல் நடந்திருக்கிறது, நடிகை கஸ்தூரி ட்விட்..!!

TamilTwin India

நட்பே துணை படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

N N