சிவா இயக்கத்தில் தல அஜித் – நயன்தாரா நடிப்பில் பொங்கலுக்கு வெளியான படம் விஸ்வாசம், இந்தப் படத்திற்கு தெலுங்கில் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை.
சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘விஸ்வாசம்‘. ஜனவரி 10-ந் தேதி விஸ்வாசம் இப்படம் வெளியானது. தமிழகத்தில் ‘விஸ்வாசம்‘ படத்துக்கு பெரும் ஆதரவு கிடைத்தது, விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள் என பலருக்கும் நல்ல லாபம் கிடைத்தது.

இத்திரைப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ.125 கோடி முதல் ரூ.135 கோடி வசூல் செய்துள்ளது. விநியோகிஸ்தர்களின் பங்கு என்பது ரூ.70 கோடி முதல் ரூ.75 கோடி வரை எட்டும், இவ்வாறு வரலாறு மிக்க வசூல் சாதனையைப் படைத்தது என்பது நாம் அறிந்ததே.
இப்படத்தின் தெலுங்கு டப்பிங் மார்ச் 1 ஆம் தேதி வெளியானது. படத்தின் டப்பிங் வெளியீட்டை விநியோகஸ்தர்கள் விரும்பவில்லை காரணம் அஜித் படத்திற்கு தெலுங்கில் எதிர்பார்க்கும் வரவேற்பு கிடைக்காததே காரணம். அதேபோல் படம் வெளியான 2 நாட்களின் மொத்த வசூலே 1 கோடிக்கும் குறைவு தான் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதனால் விநியோகஸ்தர்கள் மிக அதிருப்தியில் உள்ளனர்.