fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

அஜீத்தை அறிமுகப்படுத்திய எஸ்.பி.பாலசுப்ரமணியம்

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம், பாடலுக்கு மயங்காதோர் யாரும் இல்லை. பெரியவர் முதல் இன்று உள்ள இளைஞர்கள் வரை இவரது பாடலுக்கு அடிமை. பின்னணிப் பாடல்கள் மட்டும் அல்லாது சின்னத்திரை இசை நிகழ்ச்சிகளும் கலந்து வருகிறார். அவர் தெலுங்கில் ஒரு சின்னத்திரை இசை நிகழ்ச்சியில் கடந்த 23 ஆண்டுகளாக பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் கடந்த வாரம் தனது மகன் எஸ்.பி.பி.சரண் நீதிபதியாக இருக்கும் சின்னத்திரை இசை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.

அஜீத்தை அறிமுகப்படுத்திய எஸ்.பி.பாலசுப்ரமணியம்

அப்போது எஸ்.பி.பாலசுப்ரமணியம் நடிகர் அஜித்தைப் பற்றிக் கூறினார் அதாவது, நடிகர் அஜித் ஆந்திராவில் உள்ள ஒரு மெட்ரிக்குலேசன் பள்ளியில் தன் மகன் எஸ்.பி.பி.சரணுடன் படித்தார் என்றும், ஆரம்பத்தில் விளம்பரப்படங்களில் நடிக்கும் காலகட்டத்தில் தன் மகனின் ஆடைகளை சென்டிமென்ட்டாக அணிந்து செல்வார் என்றும் பெருமை பொங்கக் கூறினார்.

அதன் பின் பிரேம புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தில் நடிக்க நான் தான் அவரை அறிமுகம் செய்து வைத்தேன்.. இப்போது அவர் பெயர் சொல்லும் அளவு பெரிய ஹூரோவாக ஆயிட்டார். இருப்பினும் அவரின் எளிமை, பணிவு எதுவும் குறையவில்லை. எவ்வித அலட்டலும் இல்லாமல் இருப்பது பல பேருக்கு முன்னுதாரணமாக உள்ளது. அவரை நினைத்துப் பெருமை கொள்கிறேன் என்றார்.

Related posts

90களில் ரஜினி, கமலை விட அதிக சம்பளம் வாங்கிய ஒரே நடிகர்…!

TamilTwin India

தற்கொலைக்கு முயன்ற ஜெயஸ்ரீயின் தற்போதைய நிலை

TamilTwin India

பிகில் வேண்டாம் என்று சொல்லும் 3 திரையரங்கம்!!!

N N