fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பிரபல நடிகருடன் மீண்டும் ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

ஐஸ்வர்யா ராஜேஷ் தமிழில் முன்னணி திரைப்பட கதாநாயகியாக இருந்து வருகிறார். அவர்களும் இவர்களும் என்ற படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தற்சமயம் பிரபல நடிகருடன் ஜோடியாக சேர இருக்கிறார்.

      கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனம் தயாரித்து நயன்தாரா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஐரா. இப்படம் இன்று வெளியாகி இருக்கிறது. இந்நிறுவனம் ஐரா  படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ஹீரோ  படத்தை தயாரித்து இருக்கிறது.  இரும்புத்திரை பட  இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கியுள்ளார். திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். மற்றொரு நடிகையாக  நாச்சியார் நடித்துள்ளார்.

பிரபல நடிகருடன் மீண்டும் ஜோடியாகும்  ஐஸ்வர்யா ராஜேஷ்

ஹீரோ படத்தைத் தொடர்ந்து கேஜேஆர் ஸ்டூடியோஸ் விஜய் சேதுபதியை வைத்து படம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு  அவர்களும் இவர்களும் படத்தின் மூலம் அறிமுகமாகி ரம்மி, பண்ணையாரும் பத்மினியும், தர்மதுரை  போன்ற படங்களில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. பிரபல நடிகரான விஜய் சேதுபதியுடன் மீண்டும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Related posts

செல்போனிலேயே எடுக்கப்பட்ட ”அகண்டன்”..!! டூலெட் நாயகனின் வித்தியாச முயற்சி..!!

TamilTwin India

நடிகர் சங்க கட்டிடத்திற்கு ரூ.1கோடி வழங்கினார் – கார்த்தி

N N

அஜித்தை பின்தொடரும் விஜய், தளபதியின் கொரானா நிதியால் திடீரென ட்ரெண்ட்டாகும் ஹாஸ்டேக்

TamilTwin India