fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

கார்த்திக் சுப்புராஜுடன் மீண்டும் இணையும் இசை அமைப்பாளர்

நடிகர் தனுஷ் படத்தின் மூலம் மீண்டும் இணைய உள்ளனர் கார்த்திக் சுப்புராஜும், இசை அமைப்பாளர் சந்தோஷ் நாராயணனும். கார்த்திக் சுப்புராஜின் பேட்ட படத்தினை தவிர அனைத்து படங்களுக்கும் இசை அமைத்தவர் சந்தோஷ் நாராயணன்.  தற்போது நடிகர் தனுஷினை வைத்து கார்த்திக் சுப்புராஜ் இயக்க உள்ள படத்தின் மூலம் மீண்டும் சந்தோஷ் நாராயணன் கார்த்திக் சுப்புராஜூடன் இணைகிறார்.  மேலும் இவர் தனுஷின் கொடி, வட சென்னை ஆகிய படங்களுக்கும் இசை அமைத்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

கார்த்திக் சுப்புராஜுடன் மீண்டும் இணையும் இசை அமைப்பாளர்

      நடிகர் தனுஷ் அசுரன் படப்பிடிப்பில் பிசியாக இருந்து வரும் நிலையில், துரை செந்தில்குமார், ராம்குமார் இயக்கத்தில் தலா ஒரு படங்களில் நடிக்க தனுஷ் ஒப்பந்தமாகி இருக்கிறார்.  கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தின் படப்பிடிப்பு தேதி தள்ளி போய்க் கொண்டு இருக்கும் நிலையில் ஜூன் மாதம் படப்பிடிப்பு ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.  நியூயார்க் நகரிலேயே பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட உள்ளது.  கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்கும் இப்படத்தினை ஒய் நாட் ஸ்டூடியோஸ் தயாரிக்க உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரபல கிரிக்கெட் வீரர் மீது கிரஸ், பிகில் பட நடிகை வெளியிட்ட புகைப்படம் !

TamilTwin India

டிக்டாக் பிரபலம் சியா கக்கார் தற்கொலை, பரபரப்பான பாலிவுட்!

TamilTwin India

செல்வராகவனின் இயக்கத்தை நேசிக்கிறேன் – நடிகர் சூர்யா

N N