தமிழ் சினிமாவில் மிக பிரபலமான முன்னணி நடிகராக விஜய், அஜித் இருந்து வருகிறார்கள். இவர்களுடன் பல நடிகை நடித்துள்ளார்கள். அதில் இவர்களுடன் ஜோடியாக நடித்த ஸ்வாதி நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் சினிமாவில் நடிக்க கவனம் செலுத்த உள்ளார்.
இளைய தளபதி விஜய்க்கு ஜோடியாக தேவா படத்திலும், தல அஜித்துடன் வான்மதி படத்தில் ஜோடியாக நடித்தவர் நடிகை ஸ்வாதி. இந்த இரண்டு பட வெற்றியை தொடர்ந்து அதிக பட வாய்ப்புகள் குவிந்தன.ஆனால் ஸ்வாதி அந்த படங்களை வேண்டாம் என்றும் படிப்புதான் முக்கியம் என சொல்லி ஐதராபாத்திற்கு சென்றார். தற்போது தெலுங்கில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

ஸ்வாதி பேட்டியில் கூறியது. அவர் நடித்து பல ஆண்டுகள் ஆகியும் தமிழ் ரசிகர்கள் எப்போது திரையில் வருவீர்கள் என்று கேட்கிறார்கள். பல வருடங்கள் கழித்தும் இளமையாக இருக்கிறேன் என்றும் பாராட்டி உள்ளார்கள். இதனால் அவரது குடும்பத்தின் ஆதரவோடு மீண்டும் நடிக்க முடிவு செய்துள்ளார் நடிகை ஸ்வாதி. அவரின் ரசிகர்களுக்காக நல்ல பட வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறேன் கூறினார் ஸ்வாதி.